சொல் பொருள்
(பெ) 1. வயிறு, கொப்பூழ், 2. ஆற்றிடைக்குறை, 3. மழை நீர், 4. ஆறு
தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு
உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு. அதன் வடிவமைப்பு நடுமேடும் சுற்றிலும் பள்ளமும் உடையதாக இருக்கும். இதனைக் கருதிய கருத்தால் சுற்றுப் பள்ளத்திடையே உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட வழக்காக உள்ளது. உந்தித்தள்ளல், உந்தீபற என்பவையும், உந்துபந்து என்னும் ஆடல்கள ஆட்சியும் எண்ணத் தக்கவை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
belly, navel, small island in a river, rain water, river
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி – குறி 140 தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும், குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி நிவந்து செல் நீத்தம் – மது 245, 246 கீழ்த்திசைக் கடலுக்குப் பரந்து செல்லும் நிறத்தையுடைய நீரின் ஆற்றிடைக்குறையை மூழ்கடித்து உயரே செல்லும் பெருக்கு மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/3,4 மாலையில் பெய்த மணம் கமழும் வெள்ளத்தோடு காலையில் வந்த முழுச்செடியான காந்தளை நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி – குறு 327/4 உனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்