உந்தூழ் என்பது பெருமூங்கில்
1. சொல் பொருள்
(பெ) பெரிய மூங்கில், உழுந்து?
2. சொல் பொருள் விளக்கம்
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
English: giant bamboo català: Bambú de Ceilan español: bambú gigante magyar: Óriásbambusz 日本語: kyo-chiku Bahasa Melayu: Buluh betong Burma မြန်မာဘာသာ: ဝါးပိုး Nederlands: Reuzenbamboe polski: Dendrokalamus olbrzymi português: Bambu-gigante, bambu-balde svenska: jättebambu தமிழ்: பெருமூங்கில் 中文: 荖濃巨竹, 印度麻竹, 龍竹 中文(臺灣): 荖濃巨竹
3. ஆங்கிலம்
Large bamboo, Bambusa arundinaca, Dendrocalamus giganteus
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133 முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில் உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் - குறி 65 முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/6 முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் - அகம் 78/8
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை - தேவா-சம்:2246/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்