சொல் பொருள்
தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது
சொல் பொருள் விளக்கம்
தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊற வைப்பதே வழக்கம். அதற்கு ‘உப்பிலி’ (உப்பு இல்லா தது) என்பது முரணாக உள்ளது. தப்புச் செய்வாரைத் தப்பிலி என்பது போன்ற மங்கல வழக்கெனக் கொள்ளலாம். எனினும் அப்படிக் கொள்ள வேண்டியதில்லை. மோர், தயிர் உணவுக்கு வேறு எத்தொடுகறிகள் இருப்பினும் ‘ஊறுகாய்’ வைத்தலே நாடறி வழக்கு. அவ்வுணவுக்கு ஒப்பில்லாத தொடுகறியாக இருப்பதால் ஒப்பிலி எனப்பட்டு, உப்பிலியாகியிருக்க வேண்டும். ஒப்பிலியப்பனையே உப்பிலியப்பன் ஆக்கவல்லார் ஊறுகாயைத் தானா மாற்றிவிட மாட்டார்?
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்