சொல் பொருள்
உப்பு – உப்புச் சுவை
சப்பு – விரும்பத்தக்க மற்றைச் சுவைகள்.
சொல் பொருள் விளக்கம்
உப்புச் சப்பு இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி அதனை முன்னர்க் குறித்து, மற்றைச் சுவைகளைப் பின்னர்க் குறிப்பர். சப்பு சாப்பிடுதலின் மூலம். சுவையானவற்றை விரும்பியுண்ணுதல் உயிரிகளின் பொதுவியல்பு. முற்றுந்துறந்த துறவியரும் சுவைக்கு அடிமையாதல் உண்டெனின் பிறரைச் சொல்வானேன். செவிச்சுவை விரும்பாராய் அவிச்சுவை விருப்பாளரை மாக்கள் என்பார் வள்ளுவர். (குறள் 420) ஆனால் அவரும் ‘உப்பமைந்தற்றால் புலவி’ என்பார்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்