சொல் பொருள்
(வி) 1. துப்பு, 2. வெளிவிடு, 3. சொரி
சொல் பொருள் விளக்கம்
1. துப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spit, emit, discharge as arrows, pour out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – குறு 239/5 பாம்பு துப்பிய மணியைப் போன்று தோன்றும் வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/7 வில் வெளிவிட்ட கடிய அம்பு ஆழத் தைக்க புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் – அகம் 31/10 புண் சொரிந்த குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்