சொல் பொருள்
குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது
சொல் பொருள் விளக்கம்
குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படுகிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது ‘யாய்’ என்றும், நின் தாய் என்பது ‘ஞாய்’ என்றும் வழங்கப்பட்ட பண்டையோர் வழக்கை எண்ணலாம். என் அம்மா என்பதை எம்மா, எம்மோ என்பது நெல்லை, முகவை வழக்கே. “எம்மோய்” என்பது கம்பர் சொல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்