சொல் பொருள்
(வி) 1. வருந்து, வருத்து, 2. மெலிவடை, 3. துவள்,
சொல் பொருள் விளக்கம்
1. வருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffer, cause suffering, grow thin, wilt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9 தசையை விரும்பும் பெட்டைநாயின் வருத்துகின்ற பசியைக்களைவதற்காக ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5 தசை ஒழிந்த யானை மெலிந்து வாடும் வேனில் காலம் உயங்கு நடை மட பிணை தழீஇய – அகம் 353/11 தளர்ந்த நடையினையுடைய இளைய பெண்யானையைத் தழுவிக்கொண்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்