Skip to content

சொல் பொருள்

(வி) 1. உயரமாக இரு, 2. மேலெழு, 3. உயர்த்து, தூக்கிப்பிடி, 4. மிகு, அதிகரி,  5. மேன்மையுறு, உன்னதமடை, 6. மறைந்துபோ,

2. (பெ.அ) தரத்தில் சிறந்த

சொல் பொருள் விளக்கம்

1. உயரமாக இரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be high, elevated, tall, lofty, move up, rise, ascend, raise, be lifted, increase, become lofty, eminent, exalted, disappear, cease to exist, high

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள நெடுந்தூரம் உயர்ந்துள்ள மலையிடத்தே

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து – முல் 86

(எல்லா)இடங்களும் சிறந்து உயர்ந்து நிற்கும் ஏழு நிலையினையுடைய மாடத்தில்,

வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7

வேனில் வெப்பம் மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காட்டில்

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67

போரை விரும்பி எடுத்துக்கொண்ட, தொலை நாட்டில் உயர்த்திய, நெடிய கொடிக்கு அருகே

விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92

வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே – புறம் 367/18

மிக்கு மேம்பட்டு நும்முடைய வாழ்நாட்கள் விளங்குவனவாகுக

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/13,14

உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய
மாங்குடி மருதன் முதல்வனாக

புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377

சிறப்புக்களில் மிக மேன்மையுள்ள, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்(உள்ள),

இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17

இப்போது வந்தாலும் அவர் செய்த பிழை மிகவும் அகன்றுவிடும் என்று கலங்கிய,

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் – நற் 226/1,2

ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *