சொல் பொருள்
(பெ) 1. மூச்சுவிடுதல், 2. சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை,
சொல் பொருள் விளக்கம்
உயிர்ப்பு என்பது வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றான் என்பது. (தொல். பொருள். 260. பேரா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
breath, respiration
Revival;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8 பெண்யானை மூச்சுவிடுவதைப் போல காற்று வீசுகின்ற உலைத்துருத்தியின் வாயில் உள்ள இரும்பு போன்று உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22 நினைத்து நினைத்து நெஞ்சுடைந்துபோகும் உன் பிரிவுத்துன்பத்தினின்றும் புதுப்பலன் தருவதாகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்