சொல் பொருள்
உயிர்மெய் என்பது உம்மைத் தொகை
சொல் பொருள் விளக்கம்
(1) மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும். (தொல். எழுத்து. 28. இளம்.)
(2) உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (உயிர் மெய்க்கு) மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமேயாயவாறு போல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க. (தொல் எழுத்து 18. நச்)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்