சொல் பொருள்
(வி) – 1. கொண்டுபோ, கூட்டிச்செல், 2. தப்பு, 3. ஏவிவிடு, 4. உயிர்வாழ், 5. நற்கதி அடை, ஈடேறு,
சொல் பொருள் விளக்கம்
1. கொண்டுபோ, கூட்டிச்செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
carry, take along with, escape as from danger, set on, live, subsist, be saved, redeemed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் சுரம் என் மகள் உய்த்த அம்பு அமை வல் வில் விடலை தாயே – ஐங் 373/4,5 வெம்மையான பாலை வழியில் என் மகளைக் கூட்டிச் சென்ற அம்பினைத் தொடுத்த வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும். நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6 காமநோய் மிகுந்த மிக்க துன்பத்திலிருந்தும் நாம் இங்கே தப்பித்தோம்; உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக்கோழி தனிப் போர் போல – குறு 305/5,6 ஏவிவிடுவாரும் இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல், குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1 வள்ளல்தன்மை உடையோரைக் காணாமல், உயிர்வாழும் வகையை எண்ணி பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10 துன்பம் கொண்ட நெஞ்சம் ஈடேறும் வழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்