சொல் பொருள்
உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது. “உன் உய்தக்காரன் உன்னைத் தேடி வந்தான்” என்பர். உராய்வு இல்லாமல், செல்ல வண்டி அச்சில் தடவும் நெய்க்கு – உயவு நெய் என்பது பெயர். உயவு > உய்வு > உய்தம் ஆயது. உயவு நெய் ‘பசை’ ‘மசை’ எனவும் வழங்குதல் உண்டு. பசை என்பது ஒட்டும் தன்மையது ஆதலால் நட்புக்கும் கொள்ளப்படும். அது பொருள் கருதிச் சேரும் நட்புக்கும் ஆயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்