சொல் பொருள்
1. (வி) தொடர்ந்து இயங்கு, 2. (பெ) 1. வலிமை, 2. மிகுகை,
சொல் பொருள் விளக்கம்
தொடர்ந்து இயங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be in constant motion, as sea, strength, increasing, heightening
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு கடல் முகந்த பருவ வானத்து – பெரும் 483 தொடர்ந்து இயங்கும் கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ கால வானத்தில் உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8 வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில் உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7 மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்