சொல் பொருள்
(பெ) 1. வலிமையுடையவர், 2. அறிவுடையோர்,
சொல் பொருள் விளக்கம்
1. வலிமையுடையவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strong persons, wise people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2 அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின் உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/9 புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்