சொல் பொருள்
புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி. செறிவுடைய செடி கொடி மரம் நிறைந்த காட்டில் சென்றால் அவை உரிஞ்சுதலும் குருதி வடியச் செய்தலும் அறியலாம். புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்