சொல் பொருள்
உரித்தல் – வைதல்
சொல் பொருள் விளக்கம்
தோலை உரித்தல் என்பது வழக்கு. அதனால் தோலுக்கு உரி என்றும் உரிவை என்றும் பெயருண்டு. இவ்வுரித்தல் உடையை உரித்தல் என்பதிலும் உண்டு. இவற்றைக் கடந்தது மானத்தை உரித்தல் என்பது. மானம் ஒரு மூடுதிரை. அதனைக் கிழிப்பது, அகற்றுவது போல உரித்தல் வழக்கு வந்தது. இன்னும் மூக்கை உரித்தல் என்பதும் வழக்கு. மூக்கை உரித்தல் நாறவைத்தல் என்னும் பொருளது. இது வசை மொழியாதல் அறிக. நாறினவன்(ள்) என்பது வசைப் பட்டம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்