சொல் பொருள்
(வி) 1. தோன்று, 2. வெகுளிகொள்,
2. (பெ) 1. அச்சம், அஞ்சுதல், 2. உருவம், வடிவம்,
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. தோன்று, 2. வெகுளிகொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appear, be angered, fear, appearance, form
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35 பிறர்க்கு வருத்தம் எனத் தோன்றின சுணங்கு அணிந்த மார்பிடத்து கதுமென உருத்த நோக்கமோடு அது நீ – பதி 52/25 சட்டென்று வெகுண்ட பார்வையுடன் முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் – பொரு 131 முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன், உரு என்ற அச்சம் பற்றிய விளக்கத்தையும், அதைப் போன்ற பலவிதமான அச்சங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள சங்கச் சொல்வளம் – 4.அஞ்சுதல் என்ற கட்டுரையைப் படிக்கவும் உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11 அழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்