சொல் பொருள்
உருட்டுப்புரட்டு – ஏமாற்றுதல்
சொல் பொருள் விளக்கம்
ஒருபொருளை உருளச் செய்தல் உருட்டு; அதனை நிலை மாறத் திருப்பிப் போடுதல் புரட்டு, உருளை இயல்பாக உருளும். அதனை உருளச் செய்தல் உருட்டு. தூண் உருளாது – அதனைக் கம்பியால் கோலிப் புரளச் செய்தல் புரட்டு. பொருள்களை உருட்டுதல் பூனை நாய் முதலியவை செய்யும். திருடர்களும் உருட்டிப் புரட்டி எடுத்துக் கொண்டு போவர். சில செய்திகளைத் திரித்துச் சொல்பவரை உன் ‘உருட்டுப் புரட்டை இங்கே வைத்துக் கொள்ளாதே’ என விழிப்பாக எச்சரிப்பாரும் உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்