சொல் பொருள்
உருமல் – முணகுதல், வைதல்
சொல் பொருள் விளக்கம்
உருமுதல் இயற்கையுடையது ‘உருமு’ எனப்படும் இடி. ஆனால் அதனை உருமு என்பதையன்றி உருமல் என்பது இல்லை. உருமல் என்பது நாய் குரைத்தலைச் சுட்டுவதே வழக்கு. இக்கால இளைஞன் அல்லது சிறுவன் வெளியேயிருந்து வருவான். அவன் ஊர் சுற்றி அலைவதை விரும்பாத தாத்தாவோ தந்தையோ வெறுப்பாகச் சொன்னாலும் முணகினாலும் தனக்குத் தானே, “உருமலுக்கு ஒன்றும் குறைவு இல்லை” என்பதும் அதைச் சொல்லிச் சிரிப்பதும் பருவச் செயலாகப் போய்விட்டது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்