சொல் பொருள்
தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும், தலையை மிக உயரமாக்கிக் காட்டுவதாகவும் உள்ளமையால் இலக்கிய நலம் விளங்க உருமால் எனப்பட்டது. உரு = ஒளி; மால் = உயரம். இலக்கிய வழக்கும் பொது வழக்கும் இணைந்து நடையிடும் சொற்களுள் ஈதொன்று. இதனைப் பொதுவழக்கெனல் தகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்