சொல் பொருள்
(பெ) ஒரு விண்மீன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு விண்மீன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The 4th naksatra, Hyades, part of Taurus;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 159-163 புதிதாகச் செய்த, மெழுகு வழித்த (துணியாலான)மேல்விதானத்தின் மேல், திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு மாறுபாடு மிகுந்த சிறப்பைக்கொண்ட திங்களொடு நிலைநின்ற உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடு மூச்சு விட்டு, தமிழர் வானியலில் முக்கியமாகக் குறிக்கப்படுவன 27 நட்சத்திரங்கள். அஸ்வினி தொடங்கி ரேவதி வரையிலான இந்த விண்மீன்கள் வரிசையில் உரோகிணி நான்காவதாகும். இது சந்திரனின் நட்சத்திரம் எனப்படும். எனவே திங்கள் உரோகிணியை ஒட்டி நகர்ந்துசெல்லும் காலம் திருமண நிகழ்ச்சிகளுக்கு உகந்த காலம் என்பர். பழந்தமிழர்கள் தங்கள் இல்லில் நடைபெறும் திருமணங்களை திங்களும் உரோகிணியும் கூடிய நாளில் நடத்தியுள்ளனர் எனச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் படுக்கையறை விதானத்தில் வரையப்பட்டிருக்கும் 12 இராசிகளும் அவற்றிலுள்ள 27 நட்சத்திரங்களும் திங்களும் உள்ள படத்தில் திங்களின் அருகே உரோகிணி வரையப்பெற்றிருக்கிறது. இதைக் கண்ட தலைவி தலைவனின் நினைவு மேலோங்க மிகுந்த துயரம் அடைகிறாள் என நெடுநல்வாடை கூறுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்