சொல் பொருள்
வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது
நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும்
சொல் பொருள் விளக்கம்
1) உலகம் என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும். (முருகு. 1. நச்.)
(2) உலகம் என்றால் மக்கள் மேலும், நிலத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் நிற்கும் பலபொருள் ஒருசொல். (தண்டி. 122. சுப். தே.)
(3) உலகம் = வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம். 51) = சுழல்வோர். உலா – நகரை வலமாகச் சுற்றி வருதல். (புறநானுற்றுச் சொற்பொழிவுகள். 349.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்