Skip to content

உலகு

சொல் பொருள் விளக்கம்

உல என்பது வேர்ச் சொல். அதற்கு உருண்டை என்பது பொருள். இவ்வேர்ச் சொல்லினின்றும் பிறக்கும் தமிழ்ச் சொற்கள் உலக்கை, உலம், உலண்டு முதலியனவாகும். ஆதியிற் கற்பாறைக்குக் குழியாகிய உரல்களில் உருண்டைக் கல்லையே உலக்கையாகப் பயன்படுத்தினர் சீவகன் “உலங்கலந்த உயர்ந்த தோளான்” எனத் திருத்தக்கதேவர் குறித்தனர். உருண்டைக் கல்லை ஒத்த தோளான் என்பது இதன் பொருள். உலண்டு என்பது உருண்டை வடிவான ஒருவகைப் புழு. எனவே உருண்டை வடி வானது எனும் பொருளில் தோன்றியது உலகு என்னும் தமிழ்ச் சொல். (வள்ளுவர் வழங்கும் மொழிநூல். வீ. ப. கா. சுந்தரம்.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *