சொல் பொருள்
உலுப்புதல் – பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல்
சொல் பொருள் விளக்கம்
மரத்தில் உள்ள காய்களை விழத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. ‘புளியம்பழம் உலுப்புதல்’ என்பது பெருவழக்கு. உலுப்பிய பின் மரத்தில் பூம்பிஞ்சு, பிஞ்சு, ஊதுகாய் அல்லது ஊதைக்காய், செங்காய், காய், கனி என்பன வெல்லாமும் இல்லையாய் உதிர்ந்து போம். கிளையை ஆட்டியோ கோல் கொண்டு அடித்தோ அலைக்கும் பேரலைப்பில் எல்லாமும் உதிர்ந்து மரம் வெறுமையாகிப் போம். அதுபோல் ஒரே வீட்டில் முதியவர் இளையவர் என்று இல்லாமல் பலர் ஒரு நோயில் மாண்டு போனால் குடும்பத்தையே உலுப்பிவிட்டது என்பர். கொள்ளை நோய் விளைவு, பல குடும்பங்கள் உலுப்பப் படுதலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்