சொல் பொருள்
குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு, ஈ மொய்த்தல், எறும்பு மொய்த்தல் என்பவற்றை எண்ணுக. இனி நெல்லி, புளி முதலியவற்றை உதிர்த்தலை உலுப்புதல் என்பது வழக்கு. உலுப்பினால் கிளைகளைப் பற்றி அசைத்தால் கூட்டி அள்ளும் அளவுக்கு பொது பொதுவென உதிரும். அதுபோல் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்