சொல் பொருள்
1. (வி) வருந்து,
2. (பெ) 1. விலங்குகளின் பிடரி மயிர், 2. துய், மலர்களில் பஞ்சுப்பிசிர் அல்லது மயிர் போன்ற உறுப்பு, 3. குதிரைகளின் தலையில் சூடப்பெற்றிருக்கும் தலையாட்டம்,
சொல் பொருள் விளக்கம்
வருந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grieve, suffer, mane of a horse or lion, hair plume on horse’s head
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு கோல் உளையும் புரவியொடு – புறம் 352/15 சிறிய கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன் பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/4 பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரை உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4 மேலே பஞ்சுபோன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும் ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164 (சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்