சொல் பொருள்
உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன.
உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல்
சொல் பொருள் விளக்கம்
உரிமையாகவோ வந்த பொருள்.
உள்ளது உரியதை விற்றாவது செய்ய வேண்டியதைச் செய்து தானே தீர வேண்டும். என்பது இதெனினும் உச்சமானது ‘வில்லாததை விற்றாவது கொடு’ என்பது. “வில்லாதது” என்பது தாலி! விற்காததை வில்லாததை என ஆயிற்று.
மனை, நிலம் முதலியன விற்பார் வாங்குவார்க்கு, “இதனை வழி வழியாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும்” என உரிமைப் படுத்தும் உறுதிமொழி எழுத்து வழியாகத் தருதல் அதன் உரிமையைத் தெளிவாக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்