சொல் பொருள்
1. (வி) 1. அழிவு ஏற்படுத்து, 2. சேதப்படுத்து, 3. கலக்கு, 4. மிதி,
2. (பெ) கால்படி
சொல் பொருள் விளக்கம்
அழிவு ஏற்படுத்து, சேதப்படுத்து, கலக்கு, மிதி, கால்படி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ravage, devastate, cause damage, stir up, trample down, 1/4 of a measure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினம் சிறந்து களன் உழக்கவும் – மது 48 வெகுளி மிகுந்து போர்க்களத்தில் அழிவை ஏற்படுத்தவும் நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14 நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய கொத்துக்களைச் சேதப்படுத்தி திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5 அலைகள் நிறைந்த கடற்பரப்பைக் கலக்கி, வலி குன்றி அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி 106/20 அவர்களை ஓடஓட விரட்டி மிதித்து, எதிர்த்து நிற்பவர்களை முட்டித்தாக்கி, வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27 மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்