Skip to content

உவரி என்பது உப்புநீர், கடல்

1. சொல் பொருள்

(பெ) 1. உப்புநீர், கடல், உவர் உப்புத்தன்மை கொண்ட நிலம், ஊர் 2. வெறுப்பு

2. சொல் பொருள் விளக்கம்

(1) உவர் + இ; உப்புச் சுவையை உடைய கடலைக் குறித்தது. உலகு சூழ் உவரி (கம்ப. ஊர்தே. 15) என்பதும் காண்க. (நாலடி. 146. குறிப்பு.)
(2) உவரி – உவர் நீர் உடையது. ‘இ’ வினைமுதற் பொருள் விகுதி. (திருவிளை. வாதவூரடிகளுக்கு. 2. ந. மு. வே.)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

salt water, sea

frustration

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
குறள் 763

எலியாகிய பகை கூடிக்‌ கடல்போல்‌ ஒலித்தாலும்‌ என்ன தீங்கு ஏற்படும்‌? பாம்பு மூச்சு விட்ட அளவில்‌ அவை கெட்டழியும்‌.

புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன்அடைக்கலமே. – திருவருட்பா 4871/4872

கூடுதற்குரிய களபம் அணிந்த இரண்டாகிய கொங்கைகளையுடைய மகளிர் கூட்டமும் பொருளும் பூமியும் என்று சொல்லப்படும் பழமையான உலகியல் ஆசைகளாகிய கடலைக் கடந்து நீங்கச் செய்து எனது மனமாகிய கல்லும் கனிந்து உருகச் செய்து கருணையாகிய அமுதத்தை மகிழ்வோடு அளித்து இரவும் பகலும் எப்போதும் எனது உள்ளத்தின்கண் எழுந்தருளுகின்றாய்; ஆதலால் யான் உன் அடைக்கலமாயினேன்

வல் ஊற்று உவரி தோண்டி – பெரும் 98

சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு

உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1

வெறுத்துப்போன ஆண்பன்றிகள் நிலத்தைக் கிளறாமல் சோம்பியிருக்க

தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *