Skip to content

சொல் பொருள்

1. (வி) உப்புக்கரி(த்தல்),

2. (பெ) 1. இனிமை, 2. உப்பு, 3. களர்நிலம்,  4. கரிப்புச்சுவை,  5. வெறுப்பு,

சொல் பொருள் விளக்கம்

உப்புக்கரி(த்தல்),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

taste saltish, pleasantness, salt, brackish soil, saltiness, frustration

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் – குறு 196/5

தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றீர்;

வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் – நற் 52/5

மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;

உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8

உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு

உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1

களர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை

கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1

கல்லை உடைத்துச் செய்த மிக்க உவர்ப்புச்சுவையுள்ள நீரைக்கொண்ட கிணறு

உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19

வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *