சொல் பொருள்
(பெ) 1. உவவு – பார்க்க உவவு 2. 60 வயதான யானை
விடுமுறை, பதினைந்து
சொல் பொருள் விளக்கம்
திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு ‘வாவு’ என்ற ஒருசொல் வழக்கு உண்டு. பதினைந்து நாட்கு ஒரு முறை – நிறை நாளும் மறைநாளும் – விடுமுறையளிப்பது பண்டை வழக்கம். ஆதலின் பதினைந்து என்று பொருள் தரும் உவாச்சொல் விடுமுறையைக் குறிப்பதாயிற்று. உவா அப்பதினான்கு என்பது இலக்கணத்து வரும் ஒரு தொடர். “உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை” (புறம். 3) என்பது நிறைமதியைக் குறிக்கின்றது. (தொல்காப்பியப் புதுமை. 79.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37 எட்டாம் நாள் திங்களாகி, அமாவாசைக் காலத்து இருண்ட மதியினைப் போன்று உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/25 அந்த 60 வயதான யானையில் அழகாகச் சவாரி செய்தவனும் நீ!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்