Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம், 2. ஊஞ்சல், 

சொல் பொருள் விளக்கம்

அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

swinging to and fro, swing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30

பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/1,2

பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி,
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கைமரத்தில் ஊஞ்சல் ஆடி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *