சொல் பொருள்
உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது
சொல் பொருள் விளக்கம்
(1) ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது.
(தொல். பொருள். 499. பேரா.)
(2) காதலர் இருவருடைய உட் கருவிகளும் உயிர்களும் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டு உள்ளங்கள் சிறத்தலையே ஊடல் என்னும் பெயரால் முன்னோர் வழங்கி வந்தனர். ஊடல் என்பது ஊடுதல், ஊடுருவுதல். உயிர் உணர்வுகள் மேன்மேலும் நுண்ணிய அகக் கருவிகளூடு ஊடுருவி, அவ்வூடலில் இன்பம் மாட்சிமைப்படுகிறது. (திருக்குறள் அறம். 16.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்