சொல் பொருள்
(பெ) ஒரு சங்க கால ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்க கால ஊர்,
இந்த ஊணூர் பாண்டியநாட்டின் மருங்கூர்ப் பட்டினத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர்.
தழும்பன் என்பவன் இந்த ஊருக்குத் தலைவனாக இருந்தான். இவன் வாய்ச்சொல் தப்பாதவன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழு நிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப்படப்பை மருங்கூர்ப் பட்டினத்து – அகம் 227/17-20 பிடி மிதித்தமையால் ஆகிய வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைமையால் அப்பெயர் கொண்ட தழும்பன் என்பானது காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூர்க்கு அப்பாலுள்ள மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப்பட்டினத்து மீன் சீவும் பாண் சேரி வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/4,5 மீன்களைப் பிடித்துண்ணும் பாண் சேரியையுடைய தப்பாத மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்ற இவ்வூரில் யானைகள் பிச்சைக்காக ஓட்டிக்கொண்டு வரப்படும். இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சை சூழ் பெரும் களிறு போல – நற் 300/9-11 பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே! பெரும் புண்பட்ட அழகினைக் கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில் பிச்சைக்காக வந்த பெரிய களிறு போல இவ் ஊரின் ஒரு பகுதி கடலை ஒட்டி இருந்தது. உள்நாட்டுப்பகுதி நெல்வளம் மிக்கது. இங்கே அன்றில் பறவைகள் நிறைய வாழும். முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் நோலா இரும்புள் போல – அகம் 220/12-14 முழங்கும் கடலின் திரைகள் காலையில் அலையும் மிகுதியான பழைய நெல்லையுடைய ஊணூரிடத்து ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறாத பெரிய மகன்றிலைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்