சொல் பொருள்
ஊதிவிடல் – தோற்கடித்தல்
சொல் பொருள் விளக்கம்
பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். மணி பிடியாச் சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால் அப்பால் போவது மெல்லுமியாகும். ஊதப் போகும் உமிபோல்வார் எனத் தோற்றவர் இயலாமையும், ஊதியவர் வலிமையும் புலப்பட ‘ஊதிவிடல்’ ஆட்சியில் உள்ளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்