சொல் பொருள்
(பெ) ஊனமர்குறடு,அடைகுறட, இறைச்சி கொத்தும் பட்டடைமரம்.,
சொல் பொருள் விளக்கம்
இறைச்சி கொத்தும் அடைகுறடு (ஊனைத் துண்டமிட வெட்டும்போது அடியில் வைக்கும் அடைமுண்டு.)
(பதிற்று: 21. ப.உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Block of wood on which butchers mince meat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10 இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை எஃகு உற சிவந்த ஊனத்து – பதி 24/21 வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்