சொல் பொருள்
(பெ) 1. ஊமை, பேசமுடியாதவன், 2. ஒரு ஆந்தை, ஊமைக்கோட்டான்,
சொல் பொருள் விளக்கம்
1. ஊமை, பேசமுடியாதவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dumb person, brown fish owl, Bubo Zeylonensis Leschenault
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல – குறு 58/4 கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும் காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல – குறு 224/3-5 கிணற்றில் விழுந்த கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட ஊமை மகனைப் போல இங்கே உயர்திணை ஊமன் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். உயர்திணை ஊமன் என்பது ஒரு ஊமையான மனிதனைக் குறிக்கும். இதனால் உயர்திணை அல்லாத ஊமன் என்பதுவும் உண்டு என்பது பெறப்படும். உயர்திணை அல்லாத ஊமன் என்பது ஒரு ஆந்தை. பேச்சு வழக்கில் ஊமைக்கோட்டான் என்று அழைக்கப்படும். இது மீனை மட்டும் தின்று வாழும். எனவே இது brown fish owl எனப்படுகிறது. “ஊம், ஊம்” என்று ஒலி எழுப்புதால் இது ஊமன் என்று அழைக்கப்படுகிறது போலும். ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை எனபன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள். பார்க்க : ஆண்டலை குடிஞை குரால் கூகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்