சொல் பொருள்
(பெ) 1. கட்டில், 2. வாகனம், 3. ஊர்ந்து நடத்தல், நடை
சொல் பொருள் விளக்கம்
1. கட்டில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cot, vehicle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/15,16 வெண்மை ஒளிவீசும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவி பரப்பிய மென்மையான படுக்கையில், சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே – துலங்கு ஊர்தி – தூங்கு கட்டில் – நச் உரை விளக்கம் – மான் மேல் ஊர்தி என்றது சிங்கம் சுமந்த படுக்கைக்கட்டிலை – பெ.விளக்கம் – அக் கட்டில் சிங்கத்தின் மேல் ஏறி ஊர்ந்து போதல் போலச் செய்யப்பட்டிருத்தலின் – அப்பெயர் பெற்றது. நின் தேர் முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது ஊர்க பாக – அகம் 44/4-6 நின் தேராகிய முற்படச் செல்லும் ஊர்தியினை, இனிப் பின்னில்லாதபடி விரைந்து செலுத்துவாயாக, பாகனே! ஒரு கால் ஊர்தி பருதிஅம்செல்வன் – அகம் 360/2 ஒற்றைச் சக்கரம் பூண்ட தேரினையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வன் மீன் பூத்து அன்ன உருவ பல் நிரை ஊர்தியொடு நல்கியோனே – புறம் 399/31,32 வானத்தே விண்மீன்கள் பூத்தாற் போல அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை ஊர்ந்துசெல்லற்கேற்ற காளைகளோடே நல்கினான் உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2 வருத்தத்தால் ஊர்ந்துசெல்வது போலும் நடையினையும் இளமையினையுமுடைய பார்ப்பான் – ஊர்தி – ஊர்ந்து செல்வது – ஈண்டு நடைக்காயிற்று – ஔ.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்