ஊறல் என்பது ஊற்றுநீர்
1. சொல் பொருள்
(பெ) ஊற்றுநீர்
2. சொல் பொருள் விளக்கம்
(பெ) ஊற்றுநீர்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
spring water
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/3,4
பருக்கைக் கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
பொலிவுள்ள நெற்றியையுடைய யானையோடு புலி போரிட்டு உண்ணும்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – அகம் 79/4
மண்ணுள்ள பக்கத்தே ஊறிய நீரைப் பருகும் பொருட்டு,
உடைகண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
நீர் பெருகி உடைத்துக்கொண்டு ஒழுகும் ஊற்றுக்கண்ணில் நீண்ட நாள் ஊறிக்கிடந்த ஊற்றுநீரை உண்ட
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் /முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை – புறம் 325/4,5
அங்குள்ள மக்கள், சேற்றைத் தோண்டியதால் ஊறிய கலங்கலான நீரை
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்/மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும் – மலை 292,293
ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்