Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நெடுங்காலம், 2. வாழ்நாள்,  3. யுகம், 4. ஊழ்வினை, விதி,

சொல் பொருள் விளக்கம்

1. நெடுங்காலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

very long time, life-time, aeon, fate

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28

நெடுநாள் வாழ்வாயாக, பூழியர் தலைவனே!

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/6

நாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்;

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6

எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4

அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *