சொல் பொருள்
(பெ) 1. இடுமணல், 2. மணற்குன்று,மணற்றிடர்
சொல் பொருள் விளக்கம்
நீர் கொணர்ந்து குவித்த மணற்றிடர். (ஐங்குறு. 19. விளக்கம். பெருமழை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heaped up sand as by waves
sand hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்கொள – நற் 15/1,2 முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால் – கலி 132/16 அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்