Skip to content

எட்டுக்கும் எழவுக்கும்: (இழவுக்கும்)

சொல் பொருள்

எட்டு – இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன்.
இழவு – இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன்.

சொல் பொருள் விளக்கம்

“எட்டுக்கும் சேர்வான்; இழவுக்கும் சேர்வான்” என்பது பழமொழி. எட்டா நாள் கடன் செய்வார் தாய் வழியார்; பதினாறாம் நாள் கடன் செய்வார் மாமன் வழியார்; இரண்டற்கும் கூடுவார் என்பது முறைபிசகைச் சுட்டுவதாம். கூடத்தகாத இடத்துக்கு கூடும் இயல்பினரை இவ்வாறு சுட்டுவது வழக்கு. தனக்கென்று எவ்வொரு திட்டமும் கொள்கையும் இல்லாமல் எங்கேயும் சேர்ந்து எப்படியும் வாழ்வாரை இழித்துரைப்பதற்கு இப்பழமொழியை ஆள்வர்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *