சொல் பொருள்
முறை கேடாகச் செயலாற்றுபவரை, “எட்டுக்கும் கூடுவான்; எழவுக்கும் கூடுவான்” என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
இறப்புச் சடங்குகளுள் எட்டு என்பது எட்டாம் நாள் நிகழும் பங்காளிகள் நிகழ்ச்சி. எழவு என்பது (இழவு) பதினாறாம் நாள், கொண்டு கொடுத்தவர் நிகழ்ச்சி. ஒன்றில் பங்கு கொண்டவர் மற்றொன்றில் பங்கு கொள்ளல் முறையாகாது. ஆதலால் முறை கேடாகச் செயலாற்றுபவரை, “எட்டுக்கும் கூடுவான்; எழவுக்கும் கூடுவான்” என்பது தென்னக வழக்கு. இது பழமொழித் தன்மையும் அடைந்து விட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்