சொல் பொருள்
(பெ) எலும்பு,
சொல் பொருள் விளக்கம்
எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச்சொல் என்பு என வழங்குகின்றது……. கன்னடத்தில் எலும்பை ‘எலு’ என்கிறார்கள். எலும்பின் ஆதிநிலையினை நாடும்பொழுது மலையாளம் வந்து உதவுகின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் ‘எலு’ என்றாயிற்று. தமிழில் விகுதி பெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது. (தமிழ் விருந்து. 96.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bone
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/17,18 பாறையிடத்துக் காய்ந்துகிடக்கும் சுள்ளி போலும் வெள்ளிய எலும்புகள் வேகம் வாய்ந்த கால்களையுடைய மிக்க பசியினைப் போக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்