எய் என்பது முள்ளம்பன்றி
1. சொல் பொருள்
(வி) 1. (அம்பு) செலுத்து, (கவண்) வீசு, எறி, 2. குன்று, குறைவுறு, 3. இளை, 4. அறி
2. (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான்
பார்க்க முளவு, முளவுமா, முளவுமான்
2. சொல் பொருள் விளக்கம்
1. (அம்பு) செலுத்து, (கவண்) வீசு, எறி,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
shoot (an arrow), shoot a stone(from a sling), be deficient, flag (as from want of food), know, understand, Porcupine
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/1,2
ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும் செலுத்திய அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1
ஊராரின் பழிமொழிகளுக்கு அஞ்சினால் விருப்பம் குன்றும்
எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8
குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/12,13
இடைநில்லாமல் இளைத்துக்கொண்டுபோகும் இடையையுடைய உன் உடல்கட்டமைப்பை அறிந்தும், அதற்கு அழகூட்டி,
தம்முடைய சொத்துச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 68
இளைத்த உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி,
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
(முன்பு தன் வலிமை)அறியாத பகைவர் (பின்பு தன் வலிமை அறிந்து) ஏவின தொழிலைச் செய்ய, – எய்யா – அறியாத – எய்யாமையே அறியாமையே – தொல்/உரி/44 – பொ.வே.சோ விளக்கம்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட முள்ளம்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்
எய்ம் முள் ளன்ன பரூஉமயிர் – நற். 98
முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும்
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை – அகம் 307/9
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் – புறம் 13/3
எய்ம் முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்