Skip to content

சொல் பொருள்

(வி) 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது, 2. பரிவுகாட்டு, 3. நினை, 2. எத்தன்மையது,

சொல் பொருள் விளக்கம்

1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

kick, dash against, be compassionate, think of, of what sort

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி – மது 376,377

இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதித்தள்ளி,

தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/6,7

தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்

கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனா துயரமொடு வருந்தி – குறு 145/2,3

கடற்கரைச் சோலையையுடைய தலைவனது கொடுமையை எண்ணி
அடங்காத் துயரமொடு வருந்தி

வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/10-12

நீண்ட திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத்
தழுவினாய் என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள்
எத்தன்மையர் ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *