சொல் பொருள்
எலியும் பூனையும் – பகை
சொல் பொருள் விளக்கம்
எலியும் பூனையும் பகையானவை. பூனையைப் பெரிதும் வளர்ப்பதே, எலித் தொல்லையை ஒழிப்பதற்கே. ஆகலின் இரையாம் எலியைப் பூனை பற்றுதல் அதன் இயற்கைத் தேவை. ஆயினும் எலி அழிகின்றதே. இதனைப் பார்த்தவர் எலியும் பூனையும் பகையானவை எனக் கருதினர். பகை என்பது ஒன்றொடு ஒன்று மாறுபடலும், போரிடலும் ஆனால் அன்றோ!, ஒன்று தாக்குகிறது, மற்றொன்று, தப்பியோட முயல்கிறது. இதில் பகையென்ன உள்ளது? ஆயினும் பகைக் கருத்தால் இணையாத இருவரைக் குறிக்கும்போது “அவர்கள் எலியும் பூனையும் போல இருக்கின்றனர்” என்கின்றனர். இவ்வழக்குச் சொல் பகைமைப் பொருள் தருவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்