சொல் பொருள்
(பெ) பகற்பொழுது
எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
எல் என்பது உரிச் சொல் எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். ஒளி என்னும் பொருள் தருவது. எல் = கதிரோன். பகல்பொழுது. நெல் – நெல்லு என்றும், பல் – பல்லு என்றும் சொல்லப்படுவதுபோல் எல் – எல்லு எனப்படும். எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது. எலும்பு வெண்ணிறமானது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
daytime
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5 பகற்பொழுதில் மழையில் வருந்திய கூட்டமான பசுக்கூட்டத்துடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்