எள் என்பது நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் விதை, அதன் செடி.
1. சொல் பொருள்
(பெ) 1. நல்லெண்ணெய் எடுக்கப்பயன்படும் விதை / அதன் செடி, 2. இகழ்ச்சி, ஏளனம்
2. சொல் பொருள் விளக்கம்
எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum
Reproach, censure, condemnation
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. – குறள் 889
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
நீலத்து அன்ன விதை புன மருங்கில் மகுளி பாயாது மலி துளி தழாலின் அகளத்து அன்ன நிறை சுனை புறவின் கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண் – மலை 102-106 பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் 105 நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள் ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் - நாலடி:11 9/1 எள் துணையானும் இரவாது தான் ஈதல் - இனிய40:16/3 எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை - ஏலாதி:50/1
வந்த வழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும் - பொருள். கள:20/7
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. – குறள் 1298
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். – குறள் 607
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 561,562 இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை இகழ்ச்சி அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி, எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப - மது:20/63 இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய - சிந்தா:1 93/1 எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா - சிந்தா:4 1097/4 உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே - சிந்தா:7 1561/4 எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன் உரை - சிந்தா:4 1029/2 சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார் - சிந்தா:4 1083/3 எள்ளி வீங்கி திரண்ட தோள் மேல் குழை வில் வீச இருந்தானே - சிந்தா:12 2591/4 எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல் - சிந்தா:10 2115/1 எள்ளும் பெரும் துயர் நோய் எவ்வம் இகப்பவோ - வளையா:35/4 களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/1,2 எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் - மணி:5/122 இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது - மணி:18/10 மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் - மணி:20/14 இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து - மணி:0/1 எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் - சீறா:1146/4 தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள் இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என - சீறா:1621/2,3 இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் - சீறா:1891/3 எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி - சீறா:3571/1 இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி - சீறா:4138/1 தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் - சீறா:4298/1 மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே - சீறா:2918/4 பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் - சீறா:3788/4 பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை - சீறா:4406/4 எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே - சீறா:2098/2 எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் - சீறா:3690/4 எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் - சீறா:2072/4 எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் - சீறா:3194/4 எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் - சீறா:1959/3 எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச - வில்லி:13 80/3 அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று - வில்லி:4 55/1 எள் பூ நிறத்தொடு கண் காமுறுத்தும் - மகத:12/71 வெள்ளி பூம் தார் எள்ளும் தோற்றத்து - உஞ்ஞை:40/250 கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் புகர் பூ அவரையும் பொங்கு குலை பயறும் - உஞ்ஞை:49/105,106 எள்ளும் மாந்தர்க்கு இன்பம் ஆக்கி - உஞ்ஞை:53/50 குழவி ஞாயிற்று எழில் இகந்து எள்ளும் திரு முக மருங்கில் செரு மீக்கூரி - உஞ்ஞை:55/4,5 எள்ளும் மாந்தர் எரி வாய் பட்ட - மகத:24/114 எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் - தேவா-சுந்:347/1 எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே - திருவா:5 46/4 எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் - 5.திருநின்ற:1 242/4 செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் - 8.பொய்:6 11/1 எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் - நாலாயி:2062/2 கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு - நாலாயி:210/1 இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு - திருப்:2/5 நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி - திருப்:4/3 தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் - திருப்:312/13 கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் - திருப்:314/9 கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் - திருப்:409/2 எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி - திருப்:848/10 கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு - திருப்:1002/1 எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது - திருப்:1143/3 சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் - திருப்:271/2 இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை - திருப்:662/1 எள் ஒத்த கோல மூக்கின் ஏந்துஇழை ஒருத்தி முன்கை - பால:19 18/1 எள் இல் பூவையும் இந்திர நீலமும் - பால-மிகை:11 7/1 எள் உடை பொரி விரவின உள சில இளநீர் - அயோ:1 56/4 எள் குலா மலர் ஏசிய நாசியர் - அயோ:11 21/1 எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் - கிட்:10 28/1 ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் - கிட்:12 23/3 எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் - சுந்:2 66/4 எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் - சுந்:2 232/1 எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் - சுந்:3 61/1 எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய் - சுந்:4 62/1 எள்இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய - யுத்1:5 53/1 கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் - யுத்2:16 132/4 எள் இல் எண்இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி - யுத்3:22 93/3 தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் - யுத்3:22 160/2 எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ - யுத்4:38 23/2 எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை - அயோ:5 8/2 மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் - யுத்1:3 120/3 ஓதியும் எள்ளும் தொள்ளை குமிழும் மூக்கு ஒக்கும் என்றால் - கிட்:13 52/1 நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்/பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப - மலை 106,107 எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ - மலை 562 எள் அற விடினே உள்ளது நாணே - குறு 112/2 எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் - கலி 35/23 எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து - அகம் 71/13 எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை - புறம் 174/13 வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட - புறம் 246/7 எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே - புறம் 313/7 மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள்/சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் - புறம் 321/2,3 எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் - கலி 145/52 சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக - அகம் 115/4 இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து - சிறு 243 தனிமை எள்ளும் பொழுதில் - ஐங் 479/4 புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி - கலி 33/27 நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் - கலி 35/7 ஏற்றுஅரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா - தேம்பா:1 73/3 எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் - தேம்பா:4 33/4 எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் - தேம்பா:5 48/1 எள்அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ - தேம்பா:7 96/1 எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் - தேம்பா:10 82/4 அரங்கவும் இவற்கு அவன் அவற்கு இவன் எள் ஒத்து - தேம்பா:23 49/1 சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் - தேம்பா:23 100/3 எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் - தேம்பா:25 23/4 எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் - தேம்பா:26 127/4 எள் உற திறப்பது ஏன் எரிசெய் வேலினோய் - தேம்பா:28 48/4 மாழ்வர் ஓதையும் எள் மலி ஆர்ப்பொடு - தேம்பா:28 101/1 எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை - தேம்பா:29 49/3 எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை - தேம்பா:30 3/4 எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் - தேம்பா:35 10/3 எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும் - தேம்பா:27 9/3 எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை - தேம்பா:6 30/1 எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் - தேம்பா:10 68/3 எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான் - தேம்பா:12 5/2 சிந்தையில் சான்றோர் எள்ளும் தீ வினை ஒன்றை நீக்கி - தேம்பா:28 18/3 எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார் - தேம்பா:28 72/4 எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே - தேம்பா:28 96/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்