சொல் பொருள்
(வி) 1. கேலிசெய், இகழ்,
சொல் பொருள் விளக்கம்
1. கேலிசெய், இகழ்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
despise, ridicule
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3 வெள்ளை எலும்புகளை அணிந்துகொண்டு, பிறர் எள்ளி நகையாடத் தோன்றி மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/12-14 விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல், அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைமாறிச் செல்லும் செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4 சேரிப்பெண்டிர் நம்மை இகழினும் இகழுக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்